Story Highlights
- பொதுவுடமை - தனியார் மயம்
சுய சார்பு பாரத இயக்கம் – Atma Nirbhar Bharat Abhiyaan Part 5
பொறுப்பு துறப்பு: நாம் அரசாங்கத்தின் ஊதுகுழல் இல்லை. அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் விபரம் பதியவே முனைகிறோம். இந்தப் பதிப்பின் நோக்கம், பாரத அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் பலன்களை அறிவதோடு, அதன் நன்மை தீமைகளை சீர்தூக்கிக் காண்பதுமாகும். நன்றி: PIB, Chennai இணைய தளம்.
நாட்டு மக்களுக்கு, 12.05.2020 அன்று, பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரத இயக்கம் குறித்து, நிதி அமைச்சரின் பத்திரிகை வெளியீடு மற்றும் Atma Nirbhar Bharat Abhiyaan – சுயசார்பு பாரத இயக்க நிவாரணத்தொகுப்பு – பகுதி 5 குறித்து வரிசையாக பார்ப்போம்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்த ஐந்தாம் கட்ட நிவாரணத் தொகுப்பு விபரம்
- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு நிதி ரூ. 40000 கோடி அதிகரிப்பு
- சுகாதாரத்தில் முதலீடு மற்றும் சீர்திருத்தங்கள்
- தொழில்நுட்பத்தால் இயங்கும் நியாயமான கல்வி
- திவால் மற்றும் தொழில் நொடித்தல் பற்றிய சீர்திருத்தங்கள்
- நிறுவன சட்ட வழுவதல்களை குற்றமற்றதாக்கல்
- பெரு நிறுவனங்கள் தொழில் செய்வதை சுலபமாக்கல்
- புதிய பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கை (சுயசார்பு பாரதம்)
- மாநில அரசுகளுக்கு ஆதரவு
சுயசார்பு பாரத இயக்க நிவாரணத் தொகுப்பு – பகுதி 5
தற்சார்பு இந்தியா
-
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு நிதி ரூ. 40000 கோடி அதிகரிப்பு
- கூடுதல் நிதி ரூ.40000 கோடி ஒதுக்கல்
- இதன் மூலம் 300 கோடி மனித வேலை தினங்கள் உருவாகும்
- புலம் பெயர்ந்து ஊர் திரும்பியவர்கள், பருவ மழைக்காலத்திலும் பணி செய்ய வாய்ப்பு
- நீடித்து நிலைக்கும் விதமாக வாழ்வாதார சொத்துக்களை உருவாக்கல்
- இதன் மூலம் அதிகரிக்கும் உற்பத்தியால் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்
-
சுகாதாரத்தில் முதலீடு மற்றும் சீர்திருத்தங்கள்
- அடித்தள சுகாதார நிறுவனங்களில் முதலீடு
- கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதார மற்றும் நல மையங்கள் அதிகரித்தல்
- அனைத்து மாவட்டங்களிலும் ‘தொற்றுநோய் மருத்துவமனை வளாகங்கள்’
- ஒருங்கிணைந்த பொது சுகாதார மையங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களையும், வட்டார அளவில் ஆய்வக வலைப்பின்னல் மற்றும் கண்காணிப்பு செய்தல்
- பெருந்தொற்றுக்களைக் கையாள பொது சுகாதார மையங்கள் அமைப்பு
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) மூலம் ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படும்
- தேசிய டிஜிட்டல் சுகாதார மாதிரி உருவாக்கப்படும்
-
தொழில்நுட்பத்தால் இயங்கும் நியாயமான கல்வி
- பிரதமரின் மின் கல்வித் திட்டம் தொடக்கம் (PM eVIDYA)
- ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம் (DIKSHA: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே கல்வித் திட்டம்)
- ஒரே நாடு, ஒரே சேனல் (வகுப்பு 1 லிருந்து 12 வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி சேனல்)
- கல்வித்துறையில் வானொலி, சமுதாய வானொலி மற்றும் ‘பாட்காஸ்ட்’களை பயன்படுத்துதல்
- பார்வையற்ற, செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விசேஷ இ-பாடங்கள்
- 2020 மே 30 தேதியிலிருந்து, உயர்நிலை வரிசையில் 100 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் தானாகவே இணையவழி கல்வித்திட்டங்கள் தொடங்க அனுமதி
- பிரதமரின் மின் கல்வித் திட்டம் தொடக்கம் (PM eVIDYA)
-
- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, உளவியல் சார்ந்த சமூக உதவி அளிக்கும் மனோதர்பன் திட்டம் தொடங்கப்படும்
- பள்ளிக்கூட, மழலைப்பருவக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய தேசிய பாடத்திட்டம்
- டிசம்பர் 2020க்குள் தேசிய அடிப்படை நிலை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இலட்சிய நோக்குத் திட்டம் தொடங்கப்படும்
-
திவால் மற்றும் தொழில் நொடித்தல் பற்றிய சீர்திருத்தங்கள்
- திவால் நடவடிக்கைகளைத் தொடங்க, குறைந்தபட்ச வரம்பு ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக அதிகரிப்பு
- பெருந்தொற்று நோய்ச் சூழலில், புதிதாக திவால் நடவடிக்கைகளைத் தொடங்கும் பணிகள் ஓராண்டு வரை நிறுத்திவைப்பு
-
நிறுவன சட்ட வழுவதல்களை குற்றமற்றதாக்கல்
- சிறிய தொழில்நுட்ப மற்றும் செயல்முறை வழுவதல்கள் தொடர்புடைய விதிமீறல்களை, வழுவதல்களை நிறுவன சட்டங்களின் கீழ் குற்றமாக்குதல்
- இசைந்து தீர்க்கக்கூடிய பெருவாரியான குற்றப்பிரிவுகள் உட்புறத் தீர்ப்பு செயல்முறைக்கு மாற்றல் மற்றும் அவ்விசயங்களில், பிராந்திய இயக்குநருக்கு கூடுதல் அதிகாரம்
-
பெரு நிறுவனங்கள் தொழில் செய்வதை சுலபமாக்கல்
- இந்தியப் பொது நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு நிதிப் பரிபாலன எல்லைக்குள் நேரடியாக செக்யுரிட்டிகளைப் பட்டியலிடுதல்
- பங்கு பரிவர்த்தனை மையங்களில் NCD (Non-Convertible Debentures)களில் பட்டியலிடும் தனியார் நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகக் கருதப்பட மாட்டாது
- கம்பனிகள் சட்டத்தில் உற்பத்தி நிறுவனங்கள் சேர்ப்பு
- தேசிய கம்பனி சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT), விசேச அமர்வுகளை கூடுதலாக உருவாக்க அதிகாரம்
- சிறிய நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தவணைத் தவறுதல்களுக்கு அபராதங்கள் குறைப்பு
-
புதிய பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கை (சுயசார்பு பாரதம்)
- பொதுநலன் கருதி பொதுத்துறை நடத்தும் முக்கியத்துறைகள் குறித்து அறிவிக்கப்படும்
- முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், குறைந்தபட்சம் ஒரு நிறுவனம், பொதுத்துறையின் கீழ் இருக்கும்; தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்படும்
- மற்ற துறைகளில், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்
- தேவையில்லாத நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை “ஒன்று முதல் நான்கு வரை” இருக்கும். மற்றவை தனியார் மயமாக்கப்படும் / இணைக்கப்படும் / மற்ற நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்படும்
-
மாநில அரசுகளுக்கு ஆதரவு
- 2020-21 ஆம் ஆண்டிற்கான கடன் வரம்பு ரூ.6.41 இலட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் (GDP) 3% ஆகும். இதில் 75% தொகையைப் பயன்படுத்திக்கொள்ள மார்ச் 2020 லேயே அனுமதிக்கப்பட்டது. பயன்படுத்தும் காலத்தை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளமுடியும். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கடன் அளவில் 14% மட்டுமே, மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன. மேலும், இப்பெருநோய்-தொற்றுநோய் காலத்தைக் கருத்தில் கொண்டு கடன் வரம்பை உயர்த்த மாநில அரசுகள் வேண்டுகோள் வைத்ததால், பரிசீலிக்கப்பட்டு, 5% அளவிற்கு (2020-21 ஆம் ஆண்டிற்கு மட்டும்) கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4.28 இலட்சம் கோடி கூடுதல் நிதியுதவி கிடைக்கும்
- இக்கடனுதவி “ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ திட்ட அமலாக்கத்திற்கும், தொழில் செய்வதைச் சுலபமாக்கல், மின் விநியோகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் துறைகளில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படும்
- செலவினங்களைக் குறைத்து, திட்டங்களில் எட்டப்படும் நிலை பொருத்து ஊக்கக் கடன் வரம்பு வழங்கும் திட்டம்
இருபது இலட்சம் கோடி
- முதல் உதவித்தொகை (கரிப் கல்யாண்) – ரூ. 1,92,800 கோடி
- நிவாரணத் தொகுப்பு – பகுதி 1 – ரூ. 5,94,550 கோடி
- நிவாரணத் தொகுப்பு – பகுதி 2 – ரூ. 31,00,000 கோடி
- நிவாரணத் தொகுப்பு – பகுதி 3 – ரூ. 1,50,000 கோடி
- நிவாரணத் தொகுப்பு – பகுதி 4 & 5 – ரூ. 48,100 கோடி
- இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு – ரூ. 8,01,603 கோடி
- ஒட்டுமொத்தம் ==========> ரூ. 20,97,053 கோடி
தலைவரே! இதுதான் Master Stroke! ஆச்சர்யமான மற்றும் மிகவும் பெரிய எண்ணிக்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டி, இதை யாரும் புரிந்து கொள்ளும் முன் அனைத்தையும் நடைமுறைப்படுத்தி விட்டால், மக்கள் வேண்டுமானால் நம்பி ஏமாறலாம்! தெய்வம் நின்றே கொல்லும்! தேசத்தை சொர்க்கமாக மாற்ற, நாட்டை விற்பனைச் சந்தையாக்க வேண்டியதில்லை தலைவரே! வாழும் வழி செய்தலும், வாழ அரசு செய்வதும் தான் தற்போதைய தேவை. 60 வருட ஊழலாட்சிகள், தவிர்க்கப்பட வேண்டியவை.
அரசும் மக்களும் வேறில்லை.
தனியாரும் மக்களும் வேறில்லை.
அப்படியெனில் ஏன், துறைகள் பொதுவுடமையாக்கப்பட்டன?
தேடல் தொடரும்..!
Useful information