நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆவணித்திங்கள் ‘௧௧’ ம் நாள் (11) வியாழக்கிழமை / 27.08.2020
தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள், வட இந்திய ஊடகங்களிடம் பெற வேண்டிய பாடம், “Investigative Journalism” என்றால் என்னவென்று? ஒரு மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையின், சில அதிகாரிகளின் குற்ற மற்றும் தேச விரோத ஆதரவு நடவடிக்கைகளை நாட்டிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதும் ஒரு தொலைக்காட்சி ஊடகம்தான். புகழ்பெற்ற ஒரு நபரைக் கூட, ஆதாரங்களை ஒளித்து வைத்து, மனநோயாளியாக்கி அசிங்கப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற போதும், நீதிமன்றம் துணை கொண்டு, CBI விசாரணை மூலம், உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததும், ஒரு ஊடகம் தான்!
“ஊடகத்திற்கான ஒரே தர்மம்; நியாயம்! – தனி மனித உரிமை, ஒவ்வொரு தனி மனிதனின் நேர்மையான உரிமைக்கு, ஊடகமே பாதுகாப்பு! இத்தர்மத்தைக் காக்கும் தகுதியுடையவர்களாய்த் தங்களை தமிழகத்தின் பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி ஆவணி ‘௧௧’