நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆவணித்திங்கள் ‘௧௩’ ம் நாள் (13) சனிக்கிழமை / 29.08.2020
ஊரடங்கு, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கைக்கொண்ட, பின்னெப்போதும் செய்யக்கூடாத ஒரு தவறான முன்மாதிரி! ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமையாவது மக்களைக் காத்தல். காப்பதென்பது, ஓடி ஒளிந்து கொள்வதன்று! நோயை அழிக்க முயலும் வேளையில், நோய் தவிர்த்து வாழ முயற்சிக்க வேண்டுமேயொழிய, நோயைக்கண்டு ஓடி ஒளிந்து கொள்வதும், ஒளிந்து கொள்ள அறிவுறுத்துவதுமன்று! இருபது வருடங்கள், பின்னோக்கி சென்று விடுவோமென்று மக்களை அச்சுறுத்தி, 6 மாதங்களாக மக்களை, மக்களின், மனிதத்தின் அடிப்படை உரிமையை பறித்துக்கொண்ட தவறு, திருத்திக்கொள்ளப்பட வேண்டியது. மறுபடியும் தொடரக்கூடாத தவறு … ஊரடங்கு!!!
“மக்கள் எழுச்சி கொள்ளும்வரை, மக்கள் போராடும் வரை, எதுவும் செய்யாமலிருப்பதே சிறந்தது என்று தேர்தல் கணக்கை அரசுகள் பரிசீலிக்குமென்றால், மீண்டும் அரியணை என்பது குதிரைக்கொம்பே!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி ஆவணி ‘௧௩’