Story Highlights
- ஆட்சி மாற்றம்!
- அரசியல் மாற்றம்!
விடியலுக்கான கலங்கரை விளக்கம்!
அரசியல் மாற்றம்!
ஆட்சி மாற்றம்!
ஆண்டுகள் பல
வேண்டி நின்ற மாந்தர் – தம்
குறை தீர்க்க
மார்க்கமெதுவுமின்றி
செம்மறி மந்தைபோல் – மாறி
தினம் போலித் திராவிடம் பேசும்
திருடர்களுக்கும் பொம்மைக்கும்
ஓட்டளித்து பார்பழிக்க – மனம்
வெறுத்திந்த வெளி தவிர்த்து
பொறுப்பென்று தொழில் செய்ய
பொறுக்காது குடி கெடுக்க – அங்கே
வான் வளி கெடுத்த
கூன் மனதோனின் வாரிசுகள்
வாரிச்சுருட்டி வையம் – அவர்
அவர் சொத்தென திளைக்க
தீமைகளின் எல்லை மீற
நல்லவனொருவன் நான் வருகிறேன்
என நம்பிக்கைப் பூ
பூக்கட்டும்
இத்தமிழகம் செழிக்கட்டும்!
வஞ்சம் நிறைந்த உலகில்
நெஞ்சம் நிறைந்த அன்பரொருவன்
கொஞ்சம் இறை நிலை கொண்டு
நிறுத்தட்டும்! நிலவட்டும்
மண்ணில் காருண்யம்!
மீள வழி தெரியா கடலில்
வாழ ஒளி தரும் ஆதவனாய்
அரசியல் மாற்றம்
ஆட்சி மாற்றம்
விடியலுக்கான கலங்கரை விளக்கம்!
போலிப்பகுத்தறிவுவாதிகள், போலித் திராவிடவாதிகள் மற்றும் அவர்களின் அலங்கோலமான ஆட்சிகளால், சீர்குலைந்து விட்ட, அரசு இயந்திரம் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
அரசும், அரசியலும், அரசியல்வாதிகளும் மக்கள் சேவைக்கே என்பதை மீட்டெடுத்து, மக்களே நாட்டின் தலைவர்கள் என்ற மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவத்தை நிலை நிறுத்துவோம்!
நேர்மையும், திறமையும் உள்ளவர்களை மதிப்போம்; போற்றுவோம்! அனைவரையும் அவ்வாறே மாற்றுவோம்! சுயநலமின்றி கொண்ட கொள்கையில், எடுத்த காரியங்களில் நிற்போரை, பின்பற்றுவோரைக் காப்போம்! நல்லவரை எதிர்க்கத் துணியும் தீயவரை, அவர்களின் சதிவலைகளை உணர்ந்து, தேசத்தைக் காப்போம்!