நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீபிலவ ஆண்டு – சித்திரைத்திங்கள் ‘௩௧’ ம் நாள் (31) வெள்ளிக்கிழமை / 14.05.2021
அதே அரசாங்கச் சக்கரம் தான். ஆனால், இயக்கும் நிர்வாகம் திறனற்றதா? அல்லது ஆர்வமற்றதா? என்றறிய முடியாவண்ணம், நாட்டில் ஊரடங்கு கேலிக்கூத்தாய் உள்ளது. மக்கள் நோய் பற்றி அறியாமல் இல்லை! அரசாங்கங்களின் அதிகபட்ச வலி பற்றியறிந்ததே காரணம்! மனித உடலின், புற இயக்கத்தை வேண்டுமானாலும் நிறுத்தலாம்! ஆனால், உள் – இயக்கத்தை? மக்களுக்கு, தங்களுக்கு தேவையான அனைத்தையும் அடைய, இயங்க, உரிமை உள்ளது; அடுத்தவர் நலன் பாதிக்காதவரை! உயிர் பயம்காட்டி, உரத்தை முடமாக்க முடியுமா? எனில் இங்கு உரம் யாது? உடலின் இதயத்திற்கும், மூளைக்கும் ஒப்பானது, கல்வியும், பொருளாதாரமும்!
“மக்கள் மனமுவந்து முன்வரவேண்டும், நோயை அழிப்பதே முதல் பணியென்று! அல்லது அரசாவது நோயைக் கட்டுப்படுத்த முயலவேண்டும்; வேறு விசயங்களில் சிதறாமல்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீபிலவ சித்திரை ‘௩௧’