Story Highlights
- ஐந்து கோடி கைகள் மறைத்து நின்றாலும்..!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..! நிறைவுப்பகுதி
பொறுப்புத் துறப்பு: இது எமது சொந்தக் கருத்து. இப்பதிவில் வாழ்ந்து முடித்தோர், வாழ்ந்து கொண்டிருப்போர் போல் தோற்றங்கள் கருத்துருவாக்கத்தால் வரலாம், வரும். அதைத் தாங்கள் தங்களைக் குறிப்பதாகக் கொளின் அதற்கு நாம் பொறுப்பில்லை! இப்பதிவின் நோக்கம், மறைமுகமாக நல்லோரை ஆதரிப்பதும், தீயோரைத் தோலுரிப்பதும் ஆகும். அரசியல் கட்சிகள் சார்புநிலையுடையோர் நிச்சயம் இதைப் படிக்க வேண்டாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..?!
மைண்ட் வாய்ஸ்: தமிழ்நாட்டுல எங்களோட பலம் தெரியாம மோதறீங்க! இப்ப வந்துட்டோமுல்ல?
ஓட்டுப் போட்டவங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு ஒட்டு போடாதவங்களுக்கும் சேவை செய்வோம்! தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்போம்!
மைண்ட் வாய்ஸ்: அய்யோ! சொக்கா! முதல்ல வீட்டைப் பார்ப்பேனா? இல்லை, என் ஆசையைப் பார்ப்பேனா? எங்கூட இருக்கறவங்களுக்கே ஒண்ணும் செய்ய மாட்டேன்! (வேணும்னா அவனவன் புத்தியிருந்தா பொழைச்சிக்கலாம்) அப்படி இருக்கும்போது...அப்புறம் உரிமை..? யாருகிட்டயிருந்து..?
சமூக நீதி வென்றது! மக்கள், எங்களை நம்பி, ஆட்சியைத் தங்கத்தட்டில் வைத்து தந்துள்ளனர். புதிய விடியல் பிறந்தது. ஜனநாயகத்தின் வெற்றி தினமின்று!
மைண்ட் வாய்ஸ்: தொடர் மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, மக்கள் சொத்து கொள்ளை, இப்படி, பல முன் அனுபவமிருந்தும், இதுவெதையும், செய்யாதோரையே தோற்கடித்த, இம்முட்டாள்கள், எமக்கு மட்டும் தொடர்ந்து ஓட்டுப் போடுவார்களென்று ஏமாற, நானென்ன, 97 அடிமைகளா? ஐந்து வருடங்கள் - வாழ்நாள் செட்டில்மெண்ட்! தொடங்கட்டும் அவை!!!
மைண்ட் வாய்ஸ்: கறை, நம் கரங்களில் வந்துவிடக்கூடாது! எதைச் செய்தாலும் சரியாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும். ஏனென்றால், நான் யாருடைய பிள்ளை?
நாம் நன்றாக இருக்க வேண்டுமென்றால்..?,
இவ்வாறு சதிகாரர்கள் செய்வதைத் தடுத்தாக வேண்டும்!, ஒடுக்கியாக வேண்டும்! இல்லையென்றால், இப்பாசிச சக்திகள், நம்மை அடக்கியாளும்!
இவர்கள் யார், நம்மை அதிகாரம் செய்ய? அலுவல் செய்யச் சொல்ல! நமக்கு ஏவல் செய்ய வேண்டியவர்கள், அரசிற்கு ஆணை பிறப்பிப்பதா? வேலை செய்யச் சொல்வதா? என்ன அகங்காரம்?
ஜனநாயகம் வெல்ல வாக்களித்த நீங்கள், அவ்வாறமைந்த அரசைப் பாதுகாக்க, அரசுக்கெதிராக செயல்படும் பாசிச சக்திகளை, அரசாங்கமே தண்டிக்கும் என்று காத்திராமல், மக்களாகிய நீங்களே, அங்காங்கே, தகுந்த தண்டனை கொடுத்து, நமது நல்லாட்சியின் பெருமையை நிலை நிறுத்துங்கள்!
மைண்ட் வாய்ஸ்: எங்களைத் திருடர்கள் முன்னேற்றக் கழகம்னா சொன்னீங்க? இப்போது அப்பழியைத் துடைத்தெறிவோம்! உடன்பிறப்புகளே! இம்மக்கள், எல்லாத்தையும் வேடிக்கை பார்த்தே பழகிய எம வாகனங்கள், அதனால், இவர்களின் அடையாளத்தின் நிழலில், செய்ய வேண்டியதை செவ்வனே செய்யுங்கள்!
இனி விடியல் ஆரம்பம்!!!
முற்றும் !