Story Highlights
- அறுக்க மாட்டாதவனுக்கு 38 அரிவாள்?
நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீபிலவ ஆண்டு – ஆனித்திங்கள் ‘௨௯’ ம் நாள் (29) செவ்வாய்க்கிழமை / 13.07.2021
தேச விரோதமென்பது, தேசத்தை அழிப்பது மட்டுமல்ல! அதன் மாண்பை அவமதிப்பதுவும் தான். வீரன், வீரமென்பது சண்டையிடுவது, மற்றும் சவடால் பேசுவது மட்டுமல்ல! பொது தர்மத்தை நிலை நாட்ட, நேர்மையாக திறனோடு நிற்பது. IP கொடுத்த கம்பெனியிலிருந்து ஓடி வந்த / சொந்த கட்சியின் தேர்தல் அறிக்கையைப் படிக்கத் தெரியாத / அதற்குப் பதில் சொல்லத்தெரியாத அறிவீலிகள் ஆளும் மாநிலமாய்ப் போனதின் பலன், இனி காலமுள்ளளவும் வடுவே! ஒருங்கிணைந்த தேசமே நாட்டின் ஆணிவேர்! அதைக் கிளை விழுதுகளில் தொங்கி, அறுத்து விழுங்க கரையான்கள் முயன்றால், அதை மருந்தடித்தே (356) நீக்க வேண்டும்.
“சேற்றினில் / குட்டையில் ஊறிய மட்டையில், எந்த மட்டை நல்ல மட்டை?. அரசியலில் கயவர்கள் (குப்பைகள்) நிறைந்ததால்/சூழ்ந்ததால் அது சேறானது. திருடனுக்கு தேள் கொட்டிவிட்டாற்போல், ஆளும் கட்சி அமுக்கி வாசிக்கட்டும்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீபிலவ ஆனி ‘௨௯’