நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௭’ ம் நாள் (27) வியாழக்கிழமை / 11.01.2018
நமது சமகாலத்தில் வாய்ச்சொல் வீரர்கள் நிறைய உருவாகிவிட்டனர்! இவர்கள் எல்லாவற்றையும் விமர்சிக்கின்றனர்! எல்லாவற்றிலும் கருத்துச் சொல்கின்றனர்! இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்களது புலமை மற்றும் புத்திக்கூர்மை அவர்களது வாய்வீச்சிலேயே வெளிப்பட்டு, குட்டு உடைந்துவிடுகிறது!
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல! குற்றம் சொல்பவரெல்லாம் நல்லவரல்ல! தன்னை இகழ்வோரையும், இடித்துரைப்போரையும் தாங்குமாம் மாநிலம்!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி மார்கழி ‘௨௭’