Story Highlights
- வரலாற்றுப்பதிவு
சோழப்பேரரசு
பொறுப்பு துறப்பு: இது ஒரு வரலாற்றுக் குறும், நெடுந்தொடர்த் தேடல் தொடர் பதிவு! இக்கருத்தில், இத்தகவல்களில் உடன்பாடில்லாதவர்கள், மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் தகுந்த சான்றுகளைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கருத்துகளும் பதிவு செய்யப்படும்! பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
குடி கொள்ளலும், குடி கொடுத்தலும் முடி செய்வோரின் முதல் கடனாம்! சிவன் சொத்து குல நாசம்.
தேடல் 2
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மூதோர்! கடைச்சங்க இறுதியே, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கம் எனக்கொளில், முதல் ஐநூறு ஆண்டுகள், மற்ற அரசர்களின் பட்டயங்களே அதன் சான்று. விஜயாலய சோழன் முதற்கொண்டு 1300ம் ஆண்டு வரை, சோழ வரலாற்றை பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும், செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இவற்றுள், இராசராசன் காலத்து கல்வெட்டுகளே, சோழர் வீரம் பறை சாற்றும் சிறப்பு செய்கின்றன. போர்க்களம் குறித்து முதலில், போர்க்காலம் குறித்திடை மற்றும் (கல்வெட்டின் / செப்பேட்டின்) காரணம் கடைகுறித்து முடித்தல், வரலாற்றாசிரியர்கள் மெச்சும் பணி.
தமிழகத்தின் கற்கோயில்கள் பலவற்றை அமைத்த வகை, சோழர் பெருமை பாரறியும். சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைத் திறன் மீது மிகுந்த பற்றும் மாறாப் பயிற்சியும் ஒருங்கே பெற்றவர் சோழர் என்பது அருஞ்சிறப்பு.
சோழர்கள் வணிகத்திற்கு, பொன், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவற்றில் தயாரித்த காசுகளை வெளியிட்டுள்ளனர் என்பதும், அவற்றுள், செம்பினாலான காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. அக்காசுகளில், சோழர்களின் சின்னமான ‘புலி’ இடம் பெற்றுள்ளது. மேலும் சேர, பாண்டியர் சின்னங்களான வில்லும் கயலும் இடம் பெற்றுள்ளது. மேலும் அக்காசினை வெளியிட்ட அரசரின் பெயரும் பதியப்பட்டுள்ளது. இவற்றில் சில காசுகள் ‘ஈழக் காசு’ என்றறியப்படுகிறது. அவ்வீழக்காசில், ஒரு முரட்டு மனிதன் நிற்பதுபோல் பதிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளினால் அறியப்படுவதாதெனின் இராசராசன் காலம் முதல் முதற்குலோத்துங்கன் காலம் வரை ‘ஈழக்காசு’ வழக்கிலிருந்துள்ளது.
இலக்கிய வழி இயல் தேடல், மிகு சிரமத்தோடே வரலாற்றைப் படிப்பிக்க முடிகிறது. கவிஞரின் திறன், வளம் மற்றும் பார்வை தெளி தனிக்கூற்று மற்றும் அவர்தம் கற்பனை, எதிர்பார்ப்பு சீர்தூக்கல் கடினம். இவற்றினோடே இயல் மாறா நேர்கொள் உரைநடை கவியிடம் தெளிதல் தனித்திறனே
கல்வெட்டுகள், செப்பேடுகள் வழி நோக்கின், வரலாற்றின் குறைபடாது-பிழைபடாது செய்தவர் சேக்கிழார் என்பது திண்ணம்.
சோழ நாட்டைச் சூழ்ந்தாண்ட சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடார் மற்றும் கங்கர் முதலிய பலவற்றோரின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சோழர் வரலாற்றை அறிந்து கொள்வதில் துணை புரிகின்றன. அதுமட்டுமல்லாமல் சீனர்கள், அரேபியர்கள் மற்றும் மார்க்கோ போலோ போன்றோர் எழுதிய பயணச் செலவு குறிப்புகளும் நமக்கு அக்கால நடைமுறைகளை தெரிந்து கொள்ள உதவுகின்றன.
காலத்தை காவியங்கள் சொல்லுமெனில் அவைக் காலத்தை வென்றவையே! காத்திருங்கள்!
நன்றி: “சோழர் வரலாறு” – நூலாசிரியர்: திரு. டாக்டர்.மா.இராசமாணிக்கனார்,
படைத்தவன் மதியோடு விதி செய்து அதில் காலத்தைப் பூட்டி, பயணக்காரணத்தை மூடி ஓருலகம் சமைத்தான். தேவி இதன் நோக்கம் மற்றும் பயன் என்னவென்று வினவ
- காலமும் விதியும்
ஒன்றோடொன்று
கலந்து இயங்க
அனைத்தும் அதனதன்
நெறிப்படி இறந்து மகிழ
கண்டுணற ஒன்றுமில்லை
என்றுளர வழியுண்டு
அறிந்துய்ய ஞானம்
மெய் காணும் குணமுண்டு
சோழர் வரலாறு – பழைய பதிவுகள்
இராஜராஜ சோழனின் வாரிசுகள், உண்மையில் யார் இராஜராஜ சோழனின் வாரிசுகள்?
சோழப்பேரரசு